Pages

Sunday, 26 February 2012

நடக்கும்போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாமே


நம்மில் பலர் நடக்கும் போது மொபைல் போனைப் பயன்படுத்தி மற்றவர்களிடம் பேசுவதையும், எஸ்.எம்.எஸ். அனுப்ப டெக்ஸ்ட் அமைப்பதனையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது எவ்வளவு ஆபத்தானது என்று நியூயார்க் நகரில் இயங்கும் ஸ்டோனி புரூக் என்னும் அமெரிக்க பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது. 20 வயது இளைஞர்களாக 33 பேரைத் தேர்ந்தெடுத்து இந்த ஆய்விற்கு உட்படுத்தியது. மொபைல் போன்களைப் பயன்படுத்துவதில் திறமைசாலிகளாய் இருக்கும் ஆண், பெண்களையே தேர்ந்தெடுக்கப்பட்டனர். 30 அடி தூரத்தில் உள்ள ஓர் இடத்தை இலக்காகக் கொண்டு முதலில் இவர்களை நடக்கவிட்டனர். பின்னர், பார்வையை பாதியாக மறைத்துக் கொண்டு இவர்களை அதே இலக்கை நோக்கி நடக்க விட்டனர். அவர்களின் நடக்கும் தன்மை, வேகம் முதலியன கண்காணித்து அளவெடுக்கப்பட்டன. பின்னர், மொபைல் போனில் பேசிய படியும், டெக்ஸ்ட் டைப் செய்த படியும் நடக்கவிடப்பட்டனர்.
ஆய்வுகளில் தெரிந்த முடிவுகள் மிகவும் பயமுறுத்தும் வகையில் இருந்தன. மொபைல் போனில் பேசியபடி நடக்கையில் 16% வேகமும், டெக்ஸ்ட் டைப் செய்கையில் 33% வேகமும் குறைந்தது. நேராக நடக்காமல் 61% திசை மாறி நடந்து பின்னர் இலக்கினை அடைய முடிந்தது. குறிப்பாக டெக்ஸ்ட் டைப் செய்கையில், இலக்கை விட்டுவிட்டு எங்கோ சென்றது தெரியவந்தது.
இதனால் இவர்களின் உணர்திறன் குறைந்தது. செயல் திறன் நினைவு தப்பியது. எந்த இடத்தில், எப்படி செயல்படுகிறோம் என்பதையும் சூழ்நிலையை உணர்ந்து செயல்படும் நிலையையும் இந்த பழக்கங்கள் மறக்கடிக்கச் செய்கின்றன. இவையே பல ஆபத்துக்களை தானாக வலிய வரவேற்கும் வழிகளைத் திறக்கின்றன என இந்த ஆய்வின் முடிவுகள் தெரியப்படுத்தி உள்ளன. ஓடும் கார்களின் பாதையில் செல்வது, திறந்திருக்கும் கழிவுநீர் குழிகளில் விழுவது, மேடு பள்ளங்களில் தடுமாறி மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் விழுவது போன்ற விளைவுகளைச் சுட்டிக் காட்டி இந்த ஆய்வு எச்சரித்துள்ளது. உயிர் வாழ்ந்தால் தானே, உடம்பில் கை, கால்கள், கண்கள் சரியாக இருந்தால் தானே நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள முடியும். எனவே நடக்கும்போது மொபைல் பயன்படுத்துவதைத் தவிர்ப்போம்.

Saturday, 18 February 2012

புரோகிராம்களை முறையாக மூடிட


விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், பல வேளைகளில் புரோகிராம்கள் திடீரென முடங்கிப் போகும். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகள் அப்படியே உறைந்து நிற்கும். பிரவுசர்கள் முடங்கிப் போகும். இவற்றை மூட முயன்றால், Not responding என்ற பிழைச் செய்தி கிடைக்கும். பின்னர் Ctrl+Alt+Del கீகளை அழுத்தி Windows Task Manager பெற்று இவற்றை மூட முயற்சிப்போம். சில வேளைகளில், இந்த வழியும் நமக்குக் கை கொடுக்காமல், பிரச்னைகளைத் தரும். இறுதியாக, ரீபூட் பட்டனை அழுத்தி விண்டோஸ் சிஸ்டத்தினை மறுபடியும் இயக்குவோம்.
சில வேளைகளில் ஏதேனும் ஒரு புதிய புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால் செய்திட முயற்சிக்கையில், அனைத்து புரோகிராம் களையும் மூடிவிடவும் என்று ஒரு செய்தி கிடைக்கும். இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம் களையும், ஒவ்வொன்றாக முறையாக மூட வேண்டியதிருக்கும். இது நேரம் எடுக்கும் செயலாகும். அவசரத்தில், சில புரோகிராம்களை மூட முடியாமல் முடங்கிப் போய், தொடக்கத்தில் குறிப் பிட்ட பிரச்னையைச் சந்திக்க வேண்டிய திருக்கும். இது போன்ற வேளைகளில் உதவிட நமக்கு இணையம் ஓர் இலவச புரோகிராம் ஒன்றைத் தருகிறது. End it All என்ற இந்த புரோகிராம் ஒரு வேலையை நமக்காக, எளிதாகவும் விரைவாகவும் நிறைவேற்றுகிறது. அது, இயங்கும் அனைத்து புரோகிராம்களையும் மூடுவதுதான். இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்து விட்டால், பின் இயங்கும் புரோகிராம்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் மூடிவிடலாம். இதனை இன்ஸ்டால் செய்து இயக்கினால், கிடைக்கும் மெனு நமக்கு விரைவான செயல்பாட்டினை மேற்கொள்ள வழி தருகிறது. “x” பட்டனை அழுத்தினால், புரோகிராம்கள் மூடப்படுகின்றன. மண்டை ஓட்டுடன் எலும்புகளைக் கொண்டுள்ள அபாய சின்னம் கொண்ட பட்டனை அழுத்தினால், அனைத்து புரோகிராம்களும் “கொல்லப்(kill)படுகின்றன’. இரண்டிற்கும் என்ன வேறுபாடு? என நீங்கள் கேட்கலாம். ஒரு புரோகிராமினை மூடுகையில், முறையாக அது மூடப்படும்.
ஆனால் அது முறை யாக மூடப்படாவிட்டால், அது இருந்தது இருந்த நிலையில் கொல்லப்படும். இருப்பினும் முதல் விருப்பத் தேர்வினை முதலில் மேற்கொள்வதே நல்லது. இந்த End it All புரோகிராமினை www.docsdownloads.com/enditall1.htm என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளுங்கள். அனைத்து விண்டோஸ் பதிப்புகளிலும் இதனை இன்ஸ்டால் செய்து இயக்கலாம்.

புதிய குரோம் பிரவுசர்

நிறுவனம் தன் புதிய குரோம் பிரவுசர் (பதிப்பு Chrome 17.0.963.26) சோதனைப் பதிப்பினை வெளியிட்டுள்ளது. வேகமான பிரவுசிங் அனுபவத்தினை வழங்குதல், முழுமையான பாதுகாப்பினை உறுதி செய்தல் என்ற இரண்டு இலக்குகளில் இதனைத் தயார் செய்துள்ளதாக கூகுள் நிறுவன தலைமைப் பொறியாளர் தெரிவித்துள்ளார். முன்பு முகவரி கட்டத்தில் இணைய தள முகவரி யினை இடுகையில், அவை ஏற்கனவே குக்கீகளில் பதிவு செய்யப்பட்டிருந்தால், முழுமையாக நமக்குக் காட்டப்பட்டு, நாம் என்டர் செய்தவுடன் கிடைக்கும். தற்போது முகவரிகளுக்கான சொற்களை இடுகை யிலேயே, அவற்றை உணர்ந்து அந்த இணையப் பக்கத்தினை பின்புலத்தில் காட்டும்படி பிரவுசர் வடிவமைக்கப் படுகிறது. கூகுள் இதனை இன்ஸ்டண்ட் சர்ச் என்ற வசதியாகத் தன் தேடுதளத்தில் கொடுத்தது. இப்போது பிரவுசரில் கிடைக்க இருக்கிறது.
பாதுகாப்பினைப் பொறுத்தவரை, பிரவுசரின் தொழில் நுட்பம் கெடுதல் விளைவிக்கும் இணைய தளங்களை மட்டும் சோதனை செய்திடாமல், தரவிறக்கம் செய்யப்படும் இயக்கத்திற்கான பைல்களையும் (Executable Files) சோதனை செய்து, அவை மோசமானவையாக இருந்தால், தடை செய்திடும்.
மேலே சொல்லப்பட்டவை இன்னும் சோதனை முறையில் தான் உள்ளது எனவும், முழுமையான வசதி விரைவில் கிடைக்கும் எனவும் கூகுள் அறிவித்துள்ளது.

Thursday, 16 February 2012

அ‌றி‌விய‌ல் பூ‌ர்வ தகவ‌ல்க‌ள்


ம‌னிதனா‌ல் எ‌ப்படி மூ‌ச்சு‌ ‌விடாம‌ல் இரு‌க்க முடியாதோ அதுபோலவே க‌ண் இமை‌‌க்காமலு‌‌ம் இரு‌க்க முடியாது. 6 ‌விநாடி‌க்கு 7 முறை ‌எ‌ன்ற ‌வி‌கி‌த‌த்‌தி‌ல் க‌ண் இமை‌த்த‌ல் ‌நிக‌ழ்‌கிறது.

‌க‌றிவே‌ப்‌பிலை‌யி‌ல் வா‌ய்‌ப்பு‌ண் வராம‌ல் தடு‌க்கு‌ம் ரைபோ‌பிளே‌யி‌ன் எ‌ன்ற ச‌த்து‌ம், சோகை வராம‌ல் தடு‌க்கு‌ம் போ‌லி‌க் அ‌மி‌ல‌ச் ச‌த்து‌ம் ‌நிறை‌ந்து‌ள்ளன.

வாழை‌த் த‌ண்டு உட‌லி‌ல் உ‌ள்ள ந‌ச்சு‌ப் பொரு‌ட்களையு‌ம் ‌சிறு‌நீரக‌த்‌தி‌ல் உ‌ள்ள க‌ற்களையு‌ம் ‌நீ‌க்க வ‌ல்லது.

ஆ‌க்டோப‌‌ஸ் ‌மீ‌னி‌ன் ந‌ஞ்சு இர‌த்த ஓ‌ட்ட‌த்தை ‌சீரா‌க்‌கி, இர‌த்த அழு‌த்த‌த்தை க‌ட்டு‌ப்படு‌த்து‌ம் மரு‌ந்தாக பய‌ன்படு‌கிறது.

நக‌ம் கடி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் த‌ன்ன‌ம்‌பி‌க்கை இ‌ன்மையையு‌ம், நர‌ம்பு‌க் கோளாறுகைளயு‌ம் வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் ‌வித‌த்‌தி‌ல் அமை‌ந்ததாகு‌ம்.

வீடு கட்ட பிளான் உருவாக்கி கொடுக்கும் பயனுள்ள இணையதளம்


புதிதாக வீடு கட்ட விரும்புபவர்கள் தங்களுக்கென்று பலவிதமான ஆசைகள் இருக்கும் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமா அல்லது இப்படி இருந்தால் நன்றாக இருக்குமா என்று பலவித எண்ணங்கள் தோன்றும் நமக்கு தோன்றும் எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்து வீடுகட்ட பிளான் உருவாக்கி கொடுக்கிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
வீட்டை கட்டிப்பார் திருமணம் நடத்திப் பார் என்பது பழமொழி ஆனால் இன்று இந்த இரண்டுமே பணம் மட்டும் இருந்தால் எளிதாக செய்துவிடலாம், அந்த வகையில் இன்று புதிதாக வீடு கட்ட விரும்புபவர்களுக்கு வீட்டுக்கான பிளான் ( வடிவமைப்பு ) உருவாக்கி கொடுக்க ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.smallblueprinter.com/sbp.html
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Design , Isometric View , 3D Walkthrough மற்றும் Print என்ற மெனுக்களில் முதலில் Design மெனு திறக்கும் இதில் Blank Plan அல்லது Sample Plan என்பதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் அடுத்து வலது பக்கம் இருக்கும் Wall டூலை பயன்படுத்தி எங்கு சுவர் வேண்டுமோ அங்கு கொண்டுவரலாம், அதே போல் எங்கு கதவு வேண்டும் , எங்கு சன்னல் வைக்க வேண்டும் என அனைத்தையுமே நாம் இதைச் சொடுக்கி எளிதாக வைத்துக் கொள்ளலாம்.Transform என்ற டூலை பயன்படுத்தி எங்கு வேண்டுமானாலும் நகர்த்தலாம் வடிவத்தை மாற்றி அமைக்கலாம். இதே போல் Isometric View மற்றும் 3D Walkthrough போன்றவற்றில் நமக்கு பிடித்த வண்ணத்தை தேர்ந்தெடுக்கலாம் எல்லாம் தேர்ந்தெடுத்த பின் Print என்ற பொத்தானை சொடுக்கி Print செய்யலாம். ஆரம்ப நிலையில் நாமே நம் விருப்பபடி எளிதாக பிளான் உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Monday, 13 February 2012

மதிப்பு மிக்க அனைத்து ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் ( Android Application Free ) இலவசமாக தறவிரக்க உதவும் பயனுள்ள தளம்


ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வெளிவந்த சில காலத்திற்குள்ளே அனைவரின் கைகளிலும் தவழ்கிறது என்றால் பயன்படுத்துவதற்கு எளிமை மற்றும் தொல்லை கொடுக்கும் பிழைகள் மிக மிக குறைவு. பல முக்கியமான ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் அனைத்தும் காசு  கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் ஒரு தளம் முக்கியமான அனைத்து ஆண்ட்ராய்டு அப்ளிகேசனையும் இலவசமாக கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
ஒவ்வொரு ஆண்ட்ராய்டு அப்ளிகேசனையும் தேடி ஒவ்வொரு தளமாக சென்று கடைசியில் 5 டாலர் கொடுங்கள் என்று கேட்கும் பல தளங்களுக்கு மத்தியில் மதிப்பு மிக்க பல ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து எளிதாக தறவிரக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.getjar.com/gold
இத்தளத்திற்கு சென்று Gold Android Application அனைத்தையும் பார்க்கலாம் இதில் நமக்கு பிடித்த அப்ளிகேசன் -அருகில் இருக்கும் Free என்ற பொத்தானை சொடுக்கி எளிதாக தறவிரக்கலாம். வெளி சந்தையில் கட்டணத்திற்கு கொடுக்கும் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் இங்கு இலவசமாக கொடுக்க காரணம் என்னவென்றால் இத்தளத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் உருவாக்குபவர்கள் இணைந்திருப்பதால் பல மென்பொருட்களை இலவசமாக கொடுக்க முடிகிறது.தளத்தின் மேலே இருக்கும்
Search box -ல் நாம் விரும்பிய அப்ளிகேசனை தேடியும் தறவிரக்கலாம். ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

உங்கள் ஆங்கில கட்டுரை மற்றும் ஆவனங்களை இலவசமாக திருத்தம் செய்து கொடுக்க ஒரு பயனுள்ளதளம்.


ஆங்கில கட்டுரைகளை இலக்கண பிழை இல்லாமல் எடிட் செய்வதற்கு உதவி செய்ய ஒரு தளம் உள்ளது, எளிதாக நம் கட்டுரைகளில் இருக்கும் பிழைகளை நீக்க உதவும் இத்தளத்தைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
கட்டுரைகளில் பெரும்பாலும் பல இடங்களில் இதற்கு பதில் இந்த வார்த்தையை பயன்படுத்தி இருப்பீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக  இருக்கும் என்று பல பேர் கூறுவர் ஆனாலும் ஆங்கில மொழி தாய்மொழியாக உள்ளவர்கள் நம் கட்டுரையைப் படித்து அதில் இருக்கும் பிழையான தகவல்களை நீக்க உதவுகிறது ஒரு தளம்.
இணையதள முகவரி : https://kibin.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Get Started என்றபொத்தானை சொடுக்கி புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கலாம் அல்லது நம் பேஸ்புக் கணக்கை கொடுத்தும் உள்நுழையலாம். அடுத்து நம்மிடம் இருக்கும் கோப்புகளை பதிவேற்றம் செய்துவிட வேண்டியது  தான் உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும் இருக்கும் எழுத்தாளர்கள் நம் கட்டுரையை படித்து அதில் இருக்கும் பிழை மற்றும் அழகான வார்த்தைகளை நமக்கு தெரியப்படுத்துவர், நமக்கு ஆங்கிலம் நன்றாக தெரியும் என்றால் நாம் கூட மற்றவரின் கட்டுரையை எடிட் செய்யலாம் யார் என்னென்ன மாற்றங்கள் செய்துள்ளனர் இதில் நமக்கு  தேவையானவை என்ன என்பதை நாம் கண்டு சேர்க்க வேண்டியதை சேர்த்துக்கொள்ளலாம்,  புதுமை விரும்பிகளுக்கும் ஆங்கில கட்டுரை எழுதும்  நம்மவர்களுக்கும் இத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.

மைக்ரோசாப்ட்-ன் ஈடு இணையில்லாத Age of Empires விளையாட்டை இனி ஆன்லைன் மூலம் விளையாடலாம்.


மைக்ரோசாப்ட்-ன் ஈடு இணையில்லாத Age of Empires விளையாட்டை இனி  ஆன்லைன் மூலம் விளையாடலாம்.
படம் 1
ஆப்ரேட்டிங் சிஸ்டம் உலகில் எத்தனை புதிய OS வந்தாலும் இன்றும் மைக்ரோசாப்ட் ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கு தனி மதிப்பு உண்டு அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் ஒரு காலத்தில் சக்கை போடு போட்ட Age of Empires விளையாட்டின் புதிய பதிப்பை   கணினி மூலமும் ஆன்லைன் மூலமும் எளிதாக விளையாடலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. எவ்வளவு நேரம் விளையாட வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லாமல் விளையாட்டின் முழு கட்டுப்பாட்டையும் நம் விரல் நுனிக்கே கொண்டு வரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Age Of Empires விளையாட்டை ஆன்லைன் மூலம் விளையாட ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.ageofempiresonline.com
இந்த விளையாட்டில் ஒரு நாட்டை நமக்கு கொடுத்து அதை எப்படி எல்லாம் மேம்படுத்தலாம், உணவில் ஆரம்பித்து பாதுகாப்பு வரை ஒவ்வொன்றையும் எப்படி எல்லாம் சிறப்பாக செய்யலாம் என்பதை நாமே முடிவு செய்யலாம்.சிறு குழந்தைகள் முதல் CEO வரை அனைத்து தரப்பினரும் விளையாடும் ஒரே விளையாட்டு இது என்பது தான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கூடுதல் சிறப்பு.த்து எக்காரணம் கொண்டும் இந்த விளையாட்டு நமக்கு சலிப்பை ஏற்படுத்தாது. ஒரு நாள் அல்லது 1 மாதம் அல்ல பல மாதங்கள் சென்றாலும் எந்தவிதமான சோர்வையும் ஏற்படுத்தாத விளையாட்டு, அறிவுக்கு தீனி போடும் விளையாட்டு மட்டுமல்ல புத்திசாலிதனத்தையும், திறமையையும் வளர்க்கும் ஒரு பயனுள்ள விளையாட்டு.ஏற்கனவே மென்பொருள் துணையுடன் ஆன்லைன் மூலம் விளையாடலாம் என்ற வசதியுடன் சேர்த்து இப்போது இனையதளம் வாயிலாக ஆன்லைன் மூலமும் விளையாடலாம். இதைப்பற்றிய ஒரு சிறப்பு அறிமுக வீடியோவையும் இத்துடன்  இணைத்துள்ளோம்.

இன்ஜினியரிங் ( Engineering Books Download ) மாணவர்களுக்குத் தேவையான அனைத்து புத்தகங்களையும் இலவசமாக தறவிரக்கலாம்


இன்ஜினியரிங் , சட்டம் , மற்றும் பிஸினஸ் தொடர்பான அனைத்து வெளிநாட்டு ஆசிரியர்கள் எழுதிய புத்தகத்தையும் ஆன்லைன் மூலம் ஒரே இடத்தில் இருந்து தறவிரக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
Engineering books download
கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு சில நேரங்களில் குறிப்பிட்ட பகுதி சார்ந்த தகவல்கள் வேண்டும் என்றால் வெளிநாட்டு எழுத்தாளர்கள் எழுதிய புத்தகத்தை வாங்க வேண்டி இருக்கும், இப்படி நமக்கு தேவைப்படும் புத்தகங்களை இலவசமாக கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://bookboon.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Search for a book என்று இருக்கும் கட்டத்திற்குள் நமக்கு எந்த புத்தகம் தேவையோ அந்தப்புத்தகத்தின் பெயரை கொடுத்து Search என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நாம் தேடியது தொடர்பான அனைத்து புத்தகங்களும் காட்டப்படும் இதில் நமக்கு தேவையான புத்தகத்தை சொடுக்கி அடுத்து வரும் திரையில் எந்த நாட்டில் , என்ன படிக்கிறோம்  என்ற தகவலை மட்டும் கொடுத்து Download என்பதை சொடுக்கி தறவிரக்கலாம். இன்ஜினியரிங் மாணவர்கள் மற்றும் மேற்படிப்பு படிக்கும் அனைவருக்கும் தேவையான பல அரிய புத்தகங்களை இத்தளத்தில் இருந்து நாம் எந்தவிதமான பயனாளர் கணக்கும் இல்லாமல் இலவசமாக தறவிரக்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

நாம் வெற்றி பெற உற்சாகப்படுத்தும் (Motivate) பயனுள்ள தளம்.


பல நேரங்களில் நமக்கு ஐடியா மற்றும் அதை செய்வதற்கான வசதி இருந்த போதும் தேவையில்லாத சோம்பேறி தனம் வந்து நம் வெற்றியை தூரமாக அழைத்து செல்லும் இப்படி இருக்கும் நம்மவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வெற்றி அடைய உதவுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
செய்யும் ஒரு செயலிலே முழுமையாக இருக்க முடியாமல் அங்கொன்றும் இங்கொன்றும் வைத்து எதிலும் முழுமையாக சாதிக்காமல் இருக்கும் நமக்கு வெற்றிக்கான மந்திரமான “ உற்சாகம் “ என்பதை தொடர்ந்து அளித்து நம்மை வெற்றி அடைய செய்கிறது ஒரு தளம்.
இணையதள முகவரி : http://lifekraze.com
இத்தளத்திற்கு சென்று நாம் Sign in என்ற பொத்தானை சொடுக்கு புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு உள்நுழையலாம். சோம்பேறியாக இருப்பவரை எப்படி எல்லாம் உற்சாகப்படுத்தலாம் என்பதை அறிவுரை சொல்லாமல் மற்றவரை முன் உதாரணமாக காட்டி நம்மை சுறுசுறுப்படைய செய்கிறது.ஸ்மார்ட் ஆக இருப்பவர்கள் எப்படி எல்லாம் நடந்து கொள்கின்றனர் என்பதை வெறுமனே சொல்வதோடு நிறுத்தாமல் அவர்களுக்கு மதிப்பெண் அளித்து  ரிவாடும் கொடுத்து மேலும் மேலும் உற்சாகப்படுத்துகிறது, நம் டிவிட்டரை போல ஒருவர் எனக்கு பிஸினர் எப்படி செய்தாலும் சரியாக வரவில்லை என்று சொல்கிறார் என்றால் அவருக்கு ஐடியாக்களை அள்ளி கொடுக்க பெரிய தலைகளும் உள்ளனர், சில நாட்களில் நாம் முழுமையாகப் பயன்படுத்தினால் நம்மிடம் இருக்கும் சோம்பேறித்தனம் முழுமையாக நீங்கிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கண்டிப்பாக இந்தப்பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

ஆன்லைன் மூலம் புரோகிராம் (கணினி மொழி) எழுதி நம்மை வல்லவர்களாக மாற்ற உதவும் தளம்.


புதிதாக கணினி துறைக்குள் புகும் நண்பர்கள் தான் தற்போது பலவிதமான கணினி மொழிகளை வெகுவிரைவாக கற்று அந்த மொழியில் வல்லவர்களாக உள்ளனர்,ஒருவர் எந்தத்துறையில் இருந்தாலும் கணினியில் புரோகிராம் எழுதி திறமையானவர்களாக  மாற நமக்கு ஒரு தளம் உதவி செய்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
கணினி மேல் கொண்ட காதலால் பலர் இன்னும் கட்டற்ற பல மென்பொருட்களை இலவசமாக கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். புதிதாக கணினி மொழி கற்க விரும்பும் அனைவருக்கும் எளிதாக கணினி மொழி கற்றுக்கொடுக்கவும் இயக்கி பார்க்கவும் ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி: http://www.programr.com
இத்தளத்திற்கு சென்று நாம் கணினி மொழியில் எந்த மொழியில் திறமையானவர்களாக மாற வேண்டுமோ அந்த மொழியை தேர்ந்தெடுக்க வேண்டியது மட்டும் தான் நம் வேலை அடுத்து வரும் திரையில் புதிதாக மொழி கற்பவர்கள் என்னென்ன அடிப்படை  புரோகிராம்கள் உள்ளன என்பதை ஒவ்வொன்றாக சொடுக்கி பார்ப்பது மட்டுமல்லாமல் அதை இயக்கியும் ( RUN) பார்க்கலாம். ஏற்கனவே புரோகிராம் எழுதியவரின் கோடிங் Download என்பதை சொடுக்கி தரவிரக்கியும் நமக்கு தேவையென்றால் மாற்றம் செய்தும்   பார்க்கலாம். கணினியின் அனைத்து முக்கிய மொழிகளுக்காக நேரடியான புரோகிராம் பயிற்சி நம்மை குறிப்பிட்ட அந்த மொழிகளில் வல்லவர்களாக்கிவிடுகிறது. இதைத்தவிர புரோகிராம் எழுத தெரிந்தவர்களுக்கு போட்டியும் வைக்கிறது இத்தளம், சவால் விடும் பல கோடிங்களும் இத்தளத்தில் எளிதாக கிடைக்கிறது, புரோகிராம் எழுதுபவர்களுக்கும் புதியவர்களுக்கும் இத்தளம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

ஒன்பதாம் வகுப்பு மாணவன் கொலையாளியாக யார் காரணம்?


சென்னை: தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு மாணவன், ஆசிரியையை கொலை செய்த சம்பவம், சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து, போலீஸ் விசாரணையிலும், மாணவனின் நண்பர்கள் வட்டாரத்திலும், சேகரிக்கப்பட்ட தகவல் விவரமாவது:

வீட்டில் அதிக செல்லம்: மாணவனின் தந்தை, ஆந்திராவைச் சேர்ந்தவர். பல ஆண்டுக்கு முன் சென்னையில் குடியேறி விட்டார். அவருக்கு, மூன்று மகள்; ஒரு மகன். துறைமுகத்தில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொழிலில் உள்ளார். வசதியான குடும்பம். இரண்டு மகள்களுக்கு, திருமணம் ஆகிவிட்டது. கடைசி மகளுக்கு திருமணம் ஆகவில்லை. ஒரே மகன் என்பதால், அதிக செல்லம். இதுவரை அவனது தந்தை, மகனை அடித்ததே இல்லை. பள்ளிக்கு எப்போதும் கார் மற்றும் பைக்கில் தான் செல்வான். தினமும் பாக்கெட் மணியாக, 100 ரூபாயை தந்தை கொடுத்தனுப்புவார். தொழிலில் கிடைக்கும் விலைஉயர்ந்த மொபைல்போன், கேமரா போன்ற பொருட்களை, மகனுக்கு கொடுப்பார். அவன், மற்ற மாணவர்களிடம் அதை காட்டி, பெருமை பேசுவான். மாணவனுக்கு பள்ளியில் மட்டுமல்லாது, மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவிலும், நண்பர்கள் அதிகம். வீட்டில் மாணவனுக்கு, தனியறையும் உண்டு. சகல வசதியுடன் வாழ்ந்த மாணவனுக்கு, படிப்பு மட்டும் கொஞ்சம் எட்டியே இருந்தது.

மூன்றாண்டுக்கு முன்பிருந்த பகை: ஒரே மகன், என்பதால் வீட்டில் அதிக செல்லத்துடன் வளர்க்கப்பட்டான். படிப்பு குறித்து, அவனது பெற்றோர் அதிக கவலை அடைந்தனர். பிளஸ் 2 முடித்துவிட்டால், அவனை வெளிநாட்டுக்குஅனுப்பி படிக்க வைக்க, தீர்மானித்து இருந்தனர். ஆனால், பள்ளியில் ஆசிரியர்களிடத்தில் மாணவனுக்கு தொடர்ந்து அவப்பெயரே ஏற்பட்டது. மாணவன் செய்யும் தவறுக்காக, வீட்டில் பெற்றோரை அழைத்து வரச் சொல்வதும், மாணவனோ, பெற்றோர் ஊரில் இல்லை என சொல்வதும் வழக்கமாக இருந்துள்ளது. இதுகுறித்து ஏற்கனவே பள்ளி முதல்வராக இருந்தவரிடம், ஆசிரியை புகார் தெரிவித்துள்ளார். ஆனால், மாணவனின் நடத்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. புதிய முதல்வர் வந்ததும், மீண்டும் ஆசிரியை புகார் செய்துள்ளார்.

பெற்றோரிடம் புகார்: இது தொடர்பாக பெற்றோர் முகவரிக்கு, கடிதம் எழுதியும், மொபைலில் எஸ்.எம்.எஸ்., மூலமாகவும், ஆசிரியை புகார் அனுப்பியுள்ளார். மகன் சரியாகப் படிக்காமல், வேறு பாதையில் போவதை கண்ட பெற்றோர், மாணவனை அடித்ததோடு, தினமும் தரப்படும் பாக்கெட் மணியை, "கட்' செய்தனர். கார், பைக்கையும் திரும்ப வாங்கிக் கொண்டனர். பெற்றோரிடம் அடியும் வாங்கி, திட்டும் வாங்கியதோடு, அனுபவித்த வசதியும் போனதை நினைத்து, மாணவன் அவமானப்பட்டிருக்கிறான்.

கொலையைக் கற்றுக் கொடுத்த சினிமா: கொலை செய்யப்படுவதற்கு முன், "அக்னி பாத்' என்ற இந்திப் படத்தை, 30க்கும் மேற்பட்ட தடவை, மொபைலிலும், "சிடி'யிலும் பார்த்துள்ளான். அதில் வரும் கொலை காட்சியை கண்டு, ஆசிரியையின் மீதான வெறி அதிகமாகி, கொலை செய்யும் அளவுக்கு மாணவனை கொண்டு சென்றுள்ளது. சம்பவத்தன்று ஆசிரியை இந்தி பாடம் எடுக்க, வகுப்பறைக்கு சென்று விட்ட பிறகு, பாடம் ஆரம்பிப்பதற்கு 10 நிமிடத்திற்கு முன், மாணவனும் வகுப்பறைக்குச் சென்றுள்ளான். தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து, ஆசிரியையிடம் கோபமாக பேசியதோடு, கண் இமைக்கும் நேரத்தில், கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளான். பெற்றோர், பிள்ளைகளுக்கு அதிக செல்லம் கொடுத்தாலும் சரி, கண்டிப்புடன் நடந்து கொண்டாலும் சரி, தவறான பாதைக்கு செல்ல வழிவகுத்து விடுகிறது.