பல நேரங்களில் நமக்கு ஐடியா மற்றும் அதை செய்வதற்கான வசதி இருந்த போதும் தேவையில்லாத சோம்பேறி தனம் வந்து நம் வெற்றியை தூரமாக அழைத்து செல்லும் இப்படி இருக்கும் நம்மவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வெற்றி அடைய உதவுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
செய்யும் ஒரு செயலிலே முழுமையாக இருக்க முடியாமல் அங்கொன்றும் இங்கொன்றும் வைத்து எதிலும் முழுமையாக சாதிக்காமல் இருக்கும் நமக்கு வெற்றிக்கான மந்திரமான “ உற்சாகம் “ என்பதை தொடர்ந்து அளித்து நம்மை வெற்றி அடைய செய்கிறது ஒரு தளம்.
இணையதள முகவரி : http://lifekraze.com
இத்தளத்திற்கு சென்று நாம் Sign in என்ற பொத்தானை சொடுக்கு புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு உள்நுழையலாம். சோம்பேறியாக இருப்பவரை எப்படி எல்லாம் உற்சாகப்படுத்தலாம் என்பதை அறிவுரை சொல்லாமல் மற்றவரை முன் உதாரணமாக காட்டி நம்மை சுறுசுறுப்படைய செய்கிறது.ஸ்மார்ட் ஆக இருப்பவர்கள் எப்படி எல்லாம் நடந்து கொள்கின்றனர் என்பதை வெறுமனே சொல்வதோடு நிறுத்தாமல் அவர்களுக்கு மதிப்பெண் அளித்து ரிவாடும் கொடுத்து மேலும் மேலும் உற்சாகப்படுத்துகிறது, நம் டிவிட்டரை போல ஒருவர் எனக்கு பிஸினர் எப்படி செய்தாலும் சரியாக வரவில்லை என்று சொல்கிறார் என்றால் அவருக்கு ஐடியாக்களை அள்ளி கொடுக்க பெரிய தலைகளும் உள்ளனர், சில நாட்களில் நாம் முழுமையாகப் பயன்படுத்தினால் நம்மிடம் இருக்கும் சோம்பேறித்தனம் முழுமையாக நீங்கிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கண்டிப்பாக இந்தப்பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
No comments:
Post a Comment